முதல் முறை கேரளா பயணம்...என்.டி.பீ.சி ட்ரைனிங் என்று பெருமையாக வீட்டிலும்,நண்பர்களிடமும் பந்தாவாக சொல்லி கொண்டு கிளம்பினாலும் மனதுக்குள் ஏதோ ஒரு குழப்பம்.."பெரிய மனது" மல்லு பெண்கள் நினைப்பு மனதில் இன்பத்தை தர,"தடித்த உடம்பு" மல்லு பையன்கள் பயத்தை தர முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் பிளாட்பாரத்தில் எனக்கான கோச்சை தேடிக்கொண்டு நடப்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது.
எஸ் மூன்று,சீட் எண் ஐந்து என்று இருக்கையை கண்டறிந்து அந்த கோச் முன் நின்று என்னுடன் இன்று இரவு ஒரே கோச்சில் இணைந்து பயணிக்கப்போகும் பெயர்களையும் சீட் நம்பரையும் கவனிப்பது எனக்கு எப்போதும் இருக்கும் ஒரு வழக்கம்.அன்றும் அதற்கு விதிவிலக்காக இல்லை.நான்காம் எண்ணிலும் ஆறாம் எண் இருக்கையிலும் இரு இருபத்திநான்கு வயது யுவதிகள் அமர்ந்து இருக்கின்றனர் என்ற செய்தி என் உள்ளத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியை கொடுத்தது.மனதின் ஒரு புறம் "ஆயிரத்தில் ஒருவன்" கார்த்தியை நிறுத்தி பரவசப்படுத்த, இன்னொரு புறம் "இந்த நப்பசையலதான் நீ நாசமா போற " என்று கட்டுப்படுத்த,ஆரவாரமில்லாமல் இருக்கையை நோக்கி நடந்தேன்.
இருக்கையை அடைந்து அந்த இரண்டு இளைஞிகளையும் பார்த்தேன்.ஒருத்தியை பார்த்த உடனேயே, இரண்டு "இளைஞிகள்" என்று நினைத்துகொண்ட என்னை மனதார அறைந்து கொண்டேன்.சுமார் முப்பது வயதானது போல தோற்றம் கொண்டிருந்தாள் அவள்.இன்னொருத்தி நல்ல வெளிர் நிறம்,நீளமான முடி என்று பல மலையாளப் படங்களில் பார்த்த பெண்களை நினைவூட்டினாள்.
"ரெண்டுல ஒண்ணு சொத்தை " என்று ஏற்கனவே நொந்து போயிருந்த என்னை இன்னும் நோகட்டிக்க என் கண்ணில் பட்டான் அவர்கள் எதிரில் அமர்ந்திருந்த,அவர்களின் மெய்க்காப்பாளன் போல தென்பட்ட ஒரு வாலிபன்."இந்த ரயில் பயணமும் மத்தத போலத்தான் இருக்கும் போல" என்று நொந்து கொண்டிருக்கும்போதே கிளம்பியது ரயில்.
ரயில் போகப்போக,நேரம் ஆக,ஆக,மனதைத் தேற்றிக்கொண்டிருந்தேன் நான்(வழக்கம் போலத்தான் ).இப்படியாகப் போய்க்கொண்டிருந்த பயணத்தில் திடீர் திருப்பமாக, அந்த 24 வயது "இளைஞி "யும் அந்த வாலிபனும் அந்த வாலிபனும் தனிய்யாகச்சென்று வேறு இடத்தில் அமர்ந்து கொள்ள,இப்போது இந்த இருக்கையில் நானும் அந்த அழகிய பெண்ணும் மட்டும் அமர்ந்திருந்தோம்.
மெல்ல அவளிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்.கேட்ட கேள்விக்கு பதிலை மட்டும் சொல்லாமல்,இன்னும் கொஞ்சம் சேர்த்தே அவள் பேசிய தினுசிலிருந்து அவளுக்கும் என்னிடம் பேசுவதில் இருக்கும் நாட்டம் புலப்பட்டது.முதல் முறை கேரளா பயணம் என்ற சாக்கில் நான் ஆரம்பித்த பேச்சு,சென்னை ஆட்டோக்காரன்,மதுரை மீனாட்சி கோயில்,அடையார் மேம்பாலம் என்று திக்கற்று போய்க்கொண்டிருந்தது.பேச்சின் ஊடே அவள் பெயரை நான் கேட்க(எல்லாம் லிஸ்டில் நான் ஏற்கனவே பார்த்தது தான்.இருந்தாலும் அவள் வாயால் தெரிந்து கொள்ளும் திருப்தி வேண்டாமா? ;) ).சிறிதும் தயக்கம் இன்றி தன் பெயரை சொன்னவள் ஏன் பெயரையும் கேட்டு தெரிந்து கொண்டாள்.மனம் சந்தோஷத்தில் மெல்ல துள்ளி குதிப்பது போன்று உணர்ந்தேன்.பேச்சின் சுவாரஸ்யத்தில் நேரம் போவதே தெரியாமல் இருந்தது எனக்கு."மத்த ரயில் பயணம் மாதிரி இதையும் கோட்ட விட்டுறாத,கண்டிப்பா இவளோட போன் நம்பர் வாங்கிடு " என்று ஏன் மனம் என்னை உந்திக் கொண்டிருக்க,எப்படியும் அதை சாதித்தே விடுவேன் என்றே எனக்கு தோன்றியது.
பேச்சு இந்த தினுசில் போய்க்கொண்டிருக்க,ஏப்ரல் மாத இறுதியில் தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக சொன்னால் அவள்.இருபத்திநான்கு வயது பெண்ணுக்கு கல்யாணம் என்பது எதிர்பார்க்க கூடிய ஒன்றுதான்.ஆனாலும் அவள் சொன்ன இந்தத் தகவல்,ஏன் மனதில் சிறு உலுக்களை கொடுத்தது.அவள் வருங்கால கணவரின் வேலயைப்பற்றியும்,அவர்கள் இருவராலும் சந்திக்கமுடியாதபடி அவர்கள் வேலை தொந்தரவு செய்வது பற்றியும்,திருமணத்திற்கு பிறகு இருவரும் துபாய் சென்று வேலை செய்வதை பற்றி அவள் குதூகலம் கலந்த தொனியில் விவரிக்கும் போது,ஏனோ தெரியவில்லை,மனதில் ஒரு வெட்க ரேகை படர்ந்தது.அவளது குதூகலம் மிக்க இந்த பேச்சுகளுக்கு என்னால் மௌனம் தோய்ந்த ஒரு சிரிப்பையே பதிலாக கொடுக்க முடிந்தது.என்னுடைய உற்சாகம் குறைந்ததை கவனித்ததாலோ,அல்லது தூக்கம் வந்ததாலோ, சுமார் பதினொன்றரை மணிக்கு பெர்த்ஐ போடலாம் என்றாள் அவள்.அவலக்கு நடு பெர்த்தை போட்டுக்கொடுத்து விட்டு நான் மேல் பெர்த்தில் போய் படுத்தேன்.
என்னையே அறியாமல் கண்ணிமைகளில் ஒரு கனம் என்னை கண்ணயர விடாமல் செய்துகொண்டிருந்தது.புரண்டு புரண்டு நான் செய்த தவத்தை நித்ரா தேவி மெச்சிநாளோ என்னவோ,இரண்டு மணி நேரம் கழித்துக் கண்ணயர்ந்தேன்.
காலையில் அவள் இறங்க ஸ்டேசன் என்னுயதர்க்கு முன்னாலேயே வந்துவிடும் என்று அறிந்திருந்த நான்,சீக்கிரமாகவே தூக்கத்தை துறந்து கீழே இறங்கினேன்.கீழே,இரவில் பார்த்ததை போல அதே புன்னகையோடு என்னை வரவேற்றாள் அவள்.இப்போதும் அவள் கண்களை சந்திக்கமுடியாமல்,ஒரு குறுநகை புரிந்து விட்டு பல் துலக்க சென்றேன்.பின்னர் அவள் எதிரே அமர்ந்தேன் நான்.
கொஞ்ச நேரம் பொருத்து பேச்சை அவளே ஆரம்பித்தாள்."அடுத்த ஸ்டேசன்ல நான் இறங்கிடுவேன்.என்னோட நண்பர் ஒருத்தர் நாப்பத்தி அஞ்சாவது சீட்டுல இருக்கார்.அவர் கிட்ட நீங்க போக வேண்டிய இடத்த பத்தி கேட்டா கரெக்டா சொல்லிடுவார் ",என்று தன் கொஞ்சும் மலையாளம் கலந்த தமிழில் சொன்னால் அவள்.சரி என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தேன் அவளுக்கு.கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அவள் இறங்க வேண்டிய இடத்தை சென்றடைந்தது.அவள் புறப்பட ஆயத்தமானாள்.அவளை வழியனுப்ப முடிவு செய்தேன்.படிகளில் அவள் இறங்க முற்பட,நான் அவளை நோக்கி,"சேச்சி,பை,உங்களோட கல்யாணத்துக்கு என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள் "என்றேன்.முகத்தில் ஆச்ச்சர்யக்குறியோடு என்னை நோக்கி திரும்பியவள்,சற்று நிதானித்து விட்டு,"தேங்க்ஸ் " என்று புன்னகையோடு சொன்னாள்.கல்லூரி காண்டீனில் வேலை பார்க்கும் ஐம்பது வயது மலையாள கிழவியை மட்டுமே "சேச்சி "என்று அழைத்து பழக்கப் பட்டிருந்த நான்,இம்முறை அந்த வார்த்தையை ஏன் உபயோகப்படுத்தினேன் என்று இன்னும் எனக்கு புலப்படாமலேயே இருக்கிறது.
ரயில் கிளம்பிய சிறிது நேரத்துக்கெல்லாம், ஒரு மனிதர் என்னிடம் வந்து "நான் இப்போ இறங்கினான்களே,அவங்களோட பிரெண்ட்.நீங்க போக இடத்துக்கு எப்படி போகணும்னா" என்று ஆரம்பித்து முழு வழியையும் சொன்னார்.
"மச்சி,மல்லு பிகருக்கு மனசு பெருசுடா ",என்று நண்பர்களிடம் நான் சொன்ன இரட்டை அர்த்த வசனத்தின் முதல் அர்த்தத்தை உணர்ந்தேன்.
Thursday, 29 July 2010
Subscribe to:
Posts (Atom)